அசுத்தமான பொது கழிப்பறைகளை சுத்தம் செய்ய மில்லியன் கணக்கான பணத்தை செலவிடும் சிங்கப்பூர்

சிங்கப்பூர், மார்ச் 5 – ஏற்கனவே தூய்மைக்குப் பெயர் பெற்ற சிங்கப்பூரில், காபி கடைகளில் உள்ள பொது கழிப்பறைகளை மேம்படுத்தவும், ஆழமாக சுத்தம் செய்யவும் 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
தூய்மை கணக்கெடுப்புகளில் தொடர்ந்து மோசமாகச் செயல்படும் கழிப்பறைகளை அடையாளம் காண, கடந்த ஆண்டு சுற்றுச் சூழல் அமைச்சு ” பொது கழிப்பறைகள் பணிக்குழு” ஒன்றை உருவாக்கியது .
எனினும் வடிவமைப்பு மற்றும் தூய்மையில் சிறந்து விளங்கும் கழிப்பறைகள் Happy Toilet Programme அதாவது HTP சான்றிதழ் பெற விண்ணப்பிக்க முடியும் என்று சுற்றுச் சூழல் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
சிங்கப்பூரின் கழிப்பறை சங்கத்தால் நடத்தப்படும் ஹேப்பி டாய்லெட் திட்டம், 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதோடு, முதன்மையாக பொது கழிப்பறைகளை அதிகபட்சம் ஆறு நட்சத்திர தர மதிப்பீட்டிற்கு உயர்த்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், காபி கடை நடத்துபவர்கள் கழிப்பறை புதுப்பித்தல் செலவுகளில் 95 விழுக்காடுவரை அரசாங்க நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம், இது 50,000 அமெரிக்க டாலர்வரை வரையறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.