Latestமலேசியா

இரட்டை நிலைப்பாடு இல்லை; சமய கேலி விவகாரங்கள் அனைத்தும் விசாரிக்கப்படுகிறது – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், மார்ச் 6 – சட்ட அமலாக்கத்தில் பாரபட்சம் இருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சமய கேலிக்குரிய அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவில் எந்த சமயத்தையும் அவமதிக்கும் எவரும் விசாரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என்று பிரதமர் அலுவலக தினசரி விளக்கக் கூட்டத்தில் பத்திரிகை செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதா (Tunku Nashrul Abaidah ) தெரிவித்தார்.

இஸ்லாத்தை குறிவைத்து கேலிகள் செய்யப்படும்போது அரசாங்கம் அமைதியாக இருக்கிறது என்ற கூற்றுகளை அவர் மறுத்தார்.

காலுறையில் அல்லா என்ற பதம் இருந்தற்காக ஒரு நிறுவனம் மற்றும் அதன் விநியோகிப்பாளருக்கு 60,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதோடு , அந்த வார்த்தையை அவமதித்த ஒருவருக்கு
12,000 ரிங்கிட் அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையும் நஸ்ருல் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!