
அலோர் ஸ்டார், மார்ச்-12 – கெடா, பொக்கோக் செனாவில் தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று கலவரத்தில் ஈடுபட்ட சம்பவத்தைப் போலீஸ் விசாரித்து வருகிறது.
பிற்பகல் 1 மணிக்கு தகவல் கிடைத்ததும் நிலவரத்தைக் கண்காணிக்க ஒரு போலீஸ் குழு அங்கு அனுப்பப்பட்டதாக, கோத்தா ஸ்டார் போலீஸ் தலைவர் சித்தி நோர் சலாவாத்தி சாஆட் கூறினார்.
தொழிற்சாலை ஊழியர்களுக்கும் 2 மேலாளர்களுக்கும் இடையில் மூண்ட வாக்குவாதம் முற்றி கலவரம் ஏற்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
சம்பளம் தாமதமாக வழங்கப்படுமென்ற அறிவிப்பால் தொழிலாளற்ற்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மூவர் இலேசான காயம் அடைந்தனர்.
அச்சம்பவம் நேற்று முதல் டிக் டோக்கில் வைரலாகி வருகிறது.