Latestமலேசியா

ஈப்போவில் காணாமல் போன தினகரன் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு

ஈப்போ, மார்ச்-14 – ஈப்போவில் செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 62 வயது தினகரன் ரத்னம், RPGC Garden Hotel அறையில் இறந்துகிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

நேற்று மாலை 4.20 மணியளவில் தங்களுக்கு அத்தகவல் கிடைத்ததாக, ஈப்போ போலீஸ் தலைவர் துணை ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அஹ்மாட் கூறினார்.

சம்பவ இடம் விரைந்த ராஜா பெர்மாய்சூரி துவாங்கு பைனுன் மருத்துவமனையின் மருத்துவக் குழு, அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.

கட்டிலில் படுத்தவாறு இறந்துகிடந்தவரின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை.

இந்நிலையில் சவப்பரிசோதனைக்காக சடலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குற்றவியல் அம்சங்கள் எதுவும் கண்டறியப்படாததால், தற்போதைக்கு திடீர் மரணமாக அச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஈப்போ, கம்போங் கெப்பாயாங், தாமான் பூலாய் ஹைட்ஸில் வசிக்கும் தினகரன், ஃபிசியோ மையத்திற்குச் செல்வதாகக் கூறி KDQ 1116 என்ற கார் பதிவு எண் பட்டை கொண்ட கருநீல Honda Accord காரில் கிளம்பிச் சென்றுள்ளார்.

கைப்பேசியை அவர் வீட்டிலேயே விட்டுச் சென்றதால் குடும்பத்தாரால் அவரைத் தொடர்புக் கொள்ள இயலாமல் போனது.

தினகரன் நீரிழிவு நோயாளி என்பதுடன், நரம்பியல் பிரச்னையால் நடப்பதற்கும் சிரமப்படுபவர்.

எனவே அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு குடும்பத்தார் பொது மக்களின் உதவியை நாடிய நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!