Latestஉலகம்

‘குண்டு’ கருஞ்சிறுத்தையைப் பார்வைக்கு வைப்பதா? சீன மிருகக்காட்சி சாலைக்குக் குவியும் கண்டனங்கள்

பெய்ஜிங், மார்ச்-14 – அதிக உடல் எடையைக் கொண்ட கருஞ்சிறுத்தையைப் பார்வைக்கு வைத்ததால், சீனாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலைக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ச்செங்டு மிருகக்காட்சி சாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

வைரலான வீடியோவில், மூச்சிரைத்த படியே அப்பெண் சிறுத்தை நடக்க சிரமப்படுவது தெரிகிறது.

நிற்பதற்கே தள்ளாடுவதோடு, தனது பெரிய வயிறை தரையோடு அது இழுத்துச் செல்கிறது.

அதிக வயதாகி விட்டதால், அதன் உடல் செயல்பாடும், metabolism எனப்படும் வளர்சிதை மாற்றமும் வெகுவாகக் குறைந்து விட்டதே, உடல் எடை பெருக்கக் காரணமென மிருகக்காட்சி சாலையின் நிர்வாகம் கூறியது.

இதையடுத்து அதன் உணவளவு குறிப்பாக மாட்டிறைச்சிக் குறைக்கப்பட்டு வருகிறது.

மிருகக்காட்சி சாலைக்கு வந்த பொது மக்களில் சிலர், சிறுத்தையின் அந்நிலைமைக்கு நிர்வாகத்தின் மனிதநேயமற்ற செயலே காரணமென குற்றம் சாட்டினர்.

அளவுக்கதிகமாக தீனியைக் கொடுத்து விட்டு அது ‘குண்டாவதை’ வேடிக்கைப் பார்த்துள்ளதாக சாடினர்.

வைரல் வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசி ஒருவர், “தயவு செய்து அச்சிறுத்தைக்கு போதிய உடற்பயிற்சியைக் கொடுங்கள்” என விரக்தியுடன் ஆலோசகனைக் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!