
சிரம்பான், மார்ச்-18 – சிரம்பான் 2 -வில் உள்ள பேரங்காடியொன்றின் உணவங்காடி நிலையத்தில் தீப்பற்றியதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
நாசி கண்டார் கடையின் சமையல் அடுப்பில் பிற்பகல் 2 மணிக்கு மேல் தீப்பிடித்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்புக் குழு, ஆறே நிமிடங்களில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
41 மீட்டர் சதுர அடி கொண்ட அக்கடையின் 70 விழுக்காட்டு பகுதி தீயில் சேதமடைந்தது.
எனினும் அதில் யாரும் காயமடையவில்லை என நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.