
ஜித்ரா, மார்ச் 18 – அண்டை நாட்டிலிருந்து 40டன் அரிசியை கடத்தி வந்ததாக நம்பப்படும் உள்நாட்டைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய இரண்டு ஆடவர்கள் ஜித்ரா பகுதியில் மாலை ஞாயிற்றுக்கிழமை 4 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
கிளந்தான் Rantau Panjang மூலமாக அவர்கள் அந்த அரிசியை கடத்தியிருப்பது தெரியவந்துள்ளதாக பேரா உலு கிந்தா பொது நடவடிக்கை பரிவிவின் கமாண்டர் முதிர்நிலை துணை கமிஷனர் ஷாரும் ஹசிம் ( Shahrum Hashim ) தெரிவித்தார்.
இந்த அரிசியை மீண்டும் பொட்டலமிடுவதற்காக ஜித்ராவில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு அவர்கள் கொண்டு சென்றதாக நம்புகிறோம் என இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
பயன்படுத்தப்பட்ட டிரெய்லர் உட்பட கைப்பற்றப்பட்ட மொத்த மதிப்பு 510,000 ரிங்கிட் ஆகும் என்பதோடு பறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் மதிப்பு 160,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
1994 ஆம் ஆண்டின் அரிசி ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் சட்டம் 522ன் பிரிவு 7(2)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 15,000 ரிங்கிட் மேற்போகாமல் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேற்போகாதா சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என ஷாரும் ஹசிம் கூறினார்.