
பெங்களூரு, மார்ச்-21 – இந்தியா, பெங்களூருவில் விலையுயர்ந்த நாய்களை வளர்த்து வருவதன் மூலம் புகழ்பெற்றவரான ஆடவர் ஒருவர், அரிய வகை நாய் இனமான ‘wolfdog’ நாயை 50 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கியுள்ளர்.
Cadabomb Okami என்ற பெயரைக் கொண்ட இந்த தனித்துவமான நாய், ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் இனத்தின் கலப்பினமாகும்.
இது இந்த வகையான முதல் நாய் என்று நம்பப்படுகிறது.
இது உலகின் மிக விலையுயர்ந்த நாய்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
அமெரிக்காவில் பிறந்த Cadabomb Okami-க்கு வயது எட்டு மாதங்களே ஆகிறது.
ஆனால் 5 கிலோ கிராம்களுக்கு மேல் எடையைக் கொண்ட இந்நாய், ஒவ்வொரு நாளும் 3 கிலோ பச்சை இறைச்சியை சாப்பிடுகிறது.
தனித்துவமான நாய்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதே தனது நோக்கம் என எஸ்.சத்திஷ் கூறினார்.
வெளியில் அதனைக் கொண்டு செல்லும் போதெல்லாம் மக்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
நடிகர்களை விட என் நாய்க்கு மவுசு அதிகமென சத்திஷ் சிரித்துக் கொண்டே கூறினார்.