
செர்டாங், மார்ச்-24 – சிலாங்கூர் செர்டாங்கில் சாலைத் தடுப்புச் சோதனையின் போது நிறுத்தப்பட்ட காரோட்டியிடமிருந்து போக்குவரத்து போலீஸ்காரர் இலஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு விசாரிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் The Mines பேரங்காடிக்கு அருகே 3 போக்குவரத்து போலீஸ்காரர்கள் சாலைத் தடுப்புச் சோதனையை மேற்கொண்ட வீடியோ முன்னதாக வைரலானது.
அவர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட காரோட்டியிடமிருந்து எதையோ ஒன்றை வாங்கி, தனது பாக்கெட்டில் வைப்பதை வீடியோவில் காண முடிகிறது.
இந்நிலையில் அச்சாலைத் தடுப்புச் சோதனையில் விதிமீறல்கள் நடைபெற்றனவா என்பது குறித்து உள்விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, செர்டாங் போலீஸ் தலைவர் ஏஏ. அன்பழகன் தெரிவித்தார்.
இலஞ்சம் வாங்கியது உண்மையென நிரூபணமானால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, அவர் உறுதியளித்தார்.
தற்போதைக்கு விசாரணையைக் கெடுக்கும் வகையில் யாரும் யூகங்களை எழுப்ப வேண்டாமென அன்பழகன் கேட்டுக் கொண்டார்.