Latestமலேசியா

அல் சுல்தான் அப்துல்லா பெயரில் போலி சமூக வலைத்தளம் – பஹாங் அரண்மனை வருத்தம்

குவந்தான், மார்ச் 28- பகாங் சுல்தான் Al Sultan Abdullah Riyatuddin Al- Mustafa Billah Shah வின் பெயரைப் பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு இருப்பதை பஹாங் அரண்மனை கண்டறிந்துள்ளது. மேலும் பிற பயனர்களின் கருத்துக்களுக்கு அந்த போலி முகநூலில் தீவிரமாக பதிலளிக்கப்பட்டுள்ளதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஹாங் சுல்தானுக்கு சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை என்றும், எந்தவொரு நடவடிக்கைகளும் அல்லது நேரடி உத்தரவுகளும் சமூக ஊடக தளங்கள், பகாங் சுல்தான் மற்றும் இஸ்தானா பகாங் செயலி மூலம் மட்டுமே ஒளிபரப்பப்படுகிறதும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tengku Ampuan Pahang Tunku Azizah Aminah Maimunah Iskandariah மற்றும் பஹாங் பட்டத்து இளவரசர் Tengku Hassanal Ibrahim Alam Shah ஆகியோருக்கு சொந்தமான ஊடக கணக்குகள் குறித்து இதே விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Tengku Ampuan Pahang இன்ஸ்டாகிராம் செயலி சமூகக் கணக்கை மட்டுமே கொண்டுள்ளது, ஆனால் அது தனிப்பட்டதாக உள்ளது.

அதே நேரத்தில் Tengku Mahkota Pahang இன்ஸ்டாகிராமில் பெயரில் மட்டுமே கணக்கு உள்ளது.
இன்ஸ்டாகிராம், டிக்டோக், யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற போன்ற பிற சமூக ஊடக தளங்களில் பகாங் சுல்தான் பெயர் மட்டுமே பயன்படுத்துகின்றன. அதே சமயம் பகாங் அரண்மனையின் அதிகாரப்பூர்வ செயலி istanapahang.my ஆகும் என்று பகாங் சுல்தானின் முகநூல் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொறுப்பற்ற தரப்பினரால் உருவாக்கப்பட்ட எந்த சமூக ஊடக கணக்குகளும் இல்லை என்று அரண்மனை மறுக்கிறது. மேலும் பொதுமக்களை குழப்பத்திற்கு ஆழ்த்துவதற்கு தவறாக வழிநடத்த முயற்சிக்கும் தரப்புக்களால் எவரும் ஏமாற்றப்பட மாட்டார்கள் என்றும் பஹாங் அரண்மனை  நம்புகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!