
ஷா அலாம், ஏப் 16 – கிள்ளான் மேருவில் போலீஸ்காரரைப் போல சீருடை அணிந்து போலி சாலைத் தடைகளை ஏற்படுத்தியதன் மூலம் கவனத்தை ஈர்த்த சிறப்புத் தேவைகள் கொண்ட ஒருவரின் செயல்கள் குறித்த வீடியோ அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலானதைத்
தொடர்ந்து அவரை போலீசார் அழைத்து தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளும்படி பணித்துள்ளனர். Sergeant Alang என்று அழைக்கப்பட்டு வந்த அந்த நபருக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போலீஸ் பாணியிலான சீருடைகளை அணியவோ அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகளைப் பிரதிபலிக்கும் செயல்களில் ஈடுபடவோ அந்த நபருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் சீருடைகள் மற்றும் இதர உடைகளும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
‘Sergeant Alang மேரு நகரில் தனது நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்குமாறு முகநூல் பயனர் Eone Psyco என்பவர் கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவை Sergeant Alang கொண்டிருந்தபோதிலும் அது சாத்தியமாகது என நெட்டிசன்களில் ஒருவர் தெரிவித்தார். மேரு வட்டாரத்தில் அந்த ஆடவரால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாவிட்டாலும் அண்மையில் சமூக வலைத்தளவாசிகளிடமிருந்து நெருக்குதல் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.