
மும்பை, ஏப்ரல்-17, தாய்லாந்தின் பேங்கோக்கிற்கான தனது பயணங்களை குடும்பத்தாரிடமிருந்து மறைப்பதற்காக, கடப்பிதழ் பக்கங்களைக் கிழித்த 51 வயது நபர், இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் கைதுச் செய்யப்பட்டார்.
விஜய் பலேராவ், திங்கள்கிழமை அதிகாலை சத்ரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகளால் சோதனைக்காகத் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அப்போது அவரது கடப்பிதழில் சில பக்கங்கள் கிழிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
துருவி துருவி விசாரித்ததில், பேங்கோக் பயணங்களை குடும்பத்திடமிருந்து மறைக்கவே பக்கங்களைக் கிழித்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து மேல் விசாரணைக்காக அவர் போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டார்.
பலேராவ் கடந்தாண்டு மட்டும் 4 முறை பேங்கோக் சென்று வந்துள்ளார்.
இம்மாதத் தொடக்கத்தில் மும்பை வழியாக அவர் இந்தோனேசியா சென்றதும் குறிப்பிடத்தக்கது.