
ஷா ஆலாம், ஏப்ரல்-23, ஷா ஆலாம், செக்ஷன் 28-ல் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் 52 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்.
கொரியர் நிறுவனமொன்றின் சேமிப்புக் கிடங்கில் அச்சோதனை நடைபெற்ற போது, ஏராளமான கள்ளக் குடியேறிகள் பக்கத்திலிருந்த தளங்களில் ஓடி ஒளிந்துகொள்ள முயன்றனர்.
எனினும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
23 முதல் 45 வயதிலான 52 பேர் அதிகாரிகளிடம் சிக்கினர்.
அவர்களில் 27 பேர் இந்திய நாட்டவர்கள், 13 பேர் பாகிஸ்தானியர்கள், 11 பேர் மியன்மாரியர்கள், ஒருவர் இந்தோனேசியர் ஆவர்.
அனைவரும் மேல் விசாரணைக்காக குடிநுழைவுத் தடுப்பு முகாம் கொண்டுச் செல்லப்பட்டனர்