
ஜோகூர் பாருவில் கார் விபத்து; சம்பவ இடத்தில் சிறுமி பலி
ஜோகூர் பாரு, ஏப்ரல் 23 – தாமான் அடா ஹைட்ஸில் (Taman Adda Heights) வேக கட்டுப்பாட்டையிழந்த மூவர் பயணித்த பெரோடுவா மைவி விபத்துக்குளானதில் சிறுமியொருவர் உயிரிழந்தார்.
இவ்விபத்தில் 24 வயது ஆண் சொற்ப காயங்களோடும், 23 வயது பெண் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாக தெப்ராவ் தீயணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் வாகனத்தில் இருந்த சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இருவரையும் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு (HSI) சிகிச்சைக்கு அனுப்பியப்பின் , சிறுமியின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.