
மலாக்கா, ஏப்ரல் 24 – உணவு விநியோகிப்பாளராக வேடமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 30 வயது மதிக்கத்தக்க நபர், பொதுமக்களின் உதவியுடன் நேற்று மாலை மாலிமில் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டார்.
அச்சந்தேக நபர் பாச்சாங்கிலிருக்கும் அங்காடியிலிருந்து, மாலிம் பகுதி வரை, உணவு விநியோக குழுவினரால் துரத்தப்பட்டு பொதுமக்களின் உதவியுடன் வெற்றிகரமாக பிடிபட்டார் என்று நம்பப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, அந்தக் கொள்ளையனை உணவு விநியோக ஊழியர்கள் தடுத்து வைத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் காணொளி வைரலாகியுள்ளது.
அதே நேரத்தில் வலைத்தளத்தில், இதுபோன்ற திருட்டு நபர்களால் எங்களுக்கும் கெட்ட பெயரென்று மற்ற உணவு விநியோக ஊழியர்களின் குமுறல்களைக் காணலாம்.
இதற்கிடையில், மத்திய மலாக்கா பகுதியில் பல குற்றங்களைச் செய்ததாக நம்பப்படும் இந்நபரைக் கைது செய்ய ஒத்துழைத்த உணவு விநியோகக் குழுவினரைப் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்