
கோலாலும்பூர், ஏப்ரல் 24- நாட்டின் அடையாளச் சின்னமான கோலாலும்பூர் கோபுரம், மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு, அதன் புதிய நிர்வாகமனா எல்.எஸ்.எச் சர்வீஸ் மாஸ்டர்ஸ் (LSH Service Masters Sdn Bhd), தொடர்புத்துறை அமைச்சுடன் இணைந்து அதன் திறப்பு விழாவுக்கான திகதியை விரைவில் அறிவிக்கும்.
நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக திகழும் கோலாலும்பூர் கோபுரம் தனது சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பது நாட்டின் சுற்றுலாத்துறைக்குத் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்று LSHSM தலைமை நிர்வாக அதிகாரி கைரில் ஃபைசல் ஓத்மான் தெரிவித்தார்.
மேலும் இப்புதுப்பித்தல் பணிகளுக்குப் பிறகு அதன் பாதுகாப்பு அம்சங்களை உறுதிச்செய்த பின்னரே, கோலாலும்பூர் கோபுரம் பொதுமக்களுக்குத் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எனினும் கோலாலும்பூர் கோபுரம் (Menara KL) அரசாங்கத்திற்குச் சொந்தமானதென்றும், அதன் புதிய திட்டங்களுக்கான அழைப்பிதழ் அனைத்தும் ஆர்எஃப்பி (RFP) மூலம் அரசாங்கம் அறிவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.