Latestமலேசியா

தனது திருடப்பட்ட ஹொன்டா கார் என்று தெரியாமலேயே அதனை வாங்கிய ஆடவர் அதிர்ச்சி

கோலாலம்பூர், ஆக – 28- திருடப்பட்ட தனது வாகனத்திற்கு பதிலாக மாற்று காரை வாங்கிய ஒருவர், அக்கார் திருடப்பட்ட தனது சொந்த கார் தான் என்பதை அறித்து பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.

36 வயதான இவென் வாலண்டைன் (Ewan Velentine ) பிப்ரவரி 28 அன்று தனது கருப்பு நிற ஹோண்டா சிவிக் (Honda Civic) திருடப்பட்டதாக போலீசில்புகார் செய்திருந்தார்.

மாற்று காரைத் தேடியபோது, ​​சுமார் 113 km தொலைவில் ஒரே மாதிரியான தோற்றமுடைய மாடலைக் கண்டார். திருடப்பட்ட தனது காரைப்போன்ற அதே நிறம், வெளியான அதே ஆண்டு மற்றும் சற்று அருவருப்பான வெளி அமைப்பும் அக்காரில் அவர் கண்டுள்ளார்.

புதிய பதிவு எண் பட்டையுடன் குறைந்த அளவிலான மைலேஜ் (mileage) ஆகியவற்றை கொண்ட அக்காரை 20,000 பவுன் அல்லது 116,374 மலேசிய ரிங்கிட்டிற்கு அவர் வாங்கியுள்ளார்.

எனினும் அந்த காரின் உள்ளே சுத்தம் செய்யப்படாமல் சில பொருட்கள் மற்றும் சற்று வித்தியாசமாக இருந்ததோடு உட்புறம் அமைக்கப்பட்டிருந்த Navigation எனப்படும் வழிசெலுத்தும் முறை அமைப்பின் ஆவணத்தில் தனது மற்றும் தனது பெற்றோரின் முகவரிகளைக் கண்டறிந்தபோது Evan மேலும் சந்தேகம் அடைந்தார்.

அதன் பின் அந்த வாகனத்தை Solihullலில் உள்ள Honda சேவை மையத்திற்கு எடுத்துச் சென்போது அங்கு தனது அசல் காரின் இயற்பியல் சாவியைப் பயன்படுத்தியபோது அது திருடப்பட்ட தனது வாகனம் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த வாகனத்தை வாங்கியதற்காக தாம் செலுத்திய பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே தாங்கள் இதுவரை பார்த்ததிலேயே சிறந்த குளோன் (clone) வேலைகளில் ஒன்று இதுவென போலீஸ் துறையும் Honda சேவை மையமும் கூறியுள்ளன

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!