Latestமலேசியா

பசார் செனி – பங்சாருக்கு இடையிலான LRT ரயில் சேவையில் தாமதம்; நிலைக்குத்திய பயணிகள்

கோலாலம்பூர், ஜூன் 9 – Pasar Seni மற்றும் பங்சார் எல்ஆர்டி நிலையங்களுக்கு இடையிலான தண்டவாள சுவிட்ச் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று பரபரப்பான காலை வேலையில் LRT சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. வழக்கமாக காலை வேளையில் வேலைக்கு செல்லும் பல பயணிகள் எல் .ஆர்.டி சேவைகளில் ஏற்பட்ட தாதமத்தினால் பெரும் சிக்கலுக்கும் சிரமத்திற்கும் உள்ளாகினர்.

இதனால் எல்.ஆர்.டி நிலையங்களில் பயணிகள் கூட்டத்தை அதிகமாக காண முடிந்தது. பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு நிலையங்களுக்கு இடையே ரயில்கள் மெனுவல் அதாவது சொந்தமான முறையில் கட்டுப்படுத்தப்படுவதாக ரேபிட்கேஎல் ஒரு அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் Pasar Seni மற்றும் பங்சார் LRT நிலையங்களுக்கு இடையிலான தண்டவாள switch அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் எனவும் அதனை பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அது குறிப்பிட்டிருக்கிறது.

உதவிக்காக LRT நிலைய ஊழியர்களின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் Pasar Seni மற்றும் பங்சார் இடையே ரயில்கள் குறைந்த வேகத்தில் தொடர்ந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கலை சரிசெய்ய RapidKLலின் தொழில்நுட்பக் குழு 24 மணி நேரமும் உழைத்து வருவதோடு தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!