
கோலாலம்பூர், ஜூன் 24 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) ‘பேய் பயண’ கும்பல் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS) மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
குடியேற்ற அமைப்பில் பயணப் பதிவுகளை கையாளும் அரசு ஊழியர்களின் உதவியுடன்தான் இக்குற்றம் நடந்திருப்பதாக AKPS சந்தேகிக்கின்றது.
தரநிலை செயல்பாட்டு நடைமுறைகளின்படி (SOP) நாட்டிற்குள் நுழையும் பார்வையாளர்களின் நடமாட்டத்தைப் பதிவு செய்யாமல், சம்பந்தப்பட்ட கும்பலுடன் சதி செய்ததாகக் கூறப்படும் அந்த அதிகாரிகளைக் கண்டறிய AKPS தீவிரம் காட்டி வருகின்றது.
முன்னதாக, KLIA-வில் உள்ள ‘பேய் பயண’ கும்பல், மேலதிகாரிகளால் கண்டறியப்படாமல் வெளிநாடு செல்லவதாகவும், இதில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்தியதாகவும்உள்ளூர் ஊடக போர்டல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பயண விவரங்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்படுவதையும் அல்லது குடியேற்ற அமைப்பில் பதிவு செய்யப்படுவதையும் AKPS நிச்சயம் தடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.