Latestமலேசியா

வீட்டில் நூற்றுக்கணக்கில் போலி சுடும் ஆயுதங்கள் பறிமுதல்; 3 வெளிநாட்டவர்கள் கைது

கோலாலம்பூர், ஜூலை-1 – கோலாலம்பூர், செகாம்புட்டில் நேற்று காலை ஒரு டேரஸ் வீட்டில் போலீஸ் நடத்திய சோதனையில், நூற்றுக்கணக்கான போலி சுடும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

Walther P99 இரக கைத்துப்பாக்கி Raifal M4, Carbine, Colt AR-15 உள்ளிட்டவையும் அவற்றிலடங்கும்.

இது தவிர்த்து Raifal Heckler, Koch MP5 துப்பாக்கிகள், CZ , Glock 17, San Viper, Browning கைத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சமூக ஊடகங்களில் வெளிப்படையாக அவை விற்கப்படுவது விசாரணையில் கண்டறியப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் கூறியது.

கைப்பற்றப்பட்ட சுடும் ஆயுதங்களின் உண்மை
சந்தை மதிப்பு தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

போலி சுடும் ஆயுதங்கள்
குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க, சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து, அவ்வீட்டின் பாதுகாவலர்களாக செயல்பட்டு வந்த ஒரு பெண் உட்பட 35 முதல் 45 வயதிலான 3 வெளிநாட்டவர்கள் கைதாகினர்.

சுடும் ஆயுதங்கள் மற்று குடிநுழைவுத் துறை சட்டத்தின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.

போலி சுடும் ஆயுதங்களை வைத்திருப்போர், சட்ட நடவடிக்கையிலிருந்து தப்ப வேண்டுமென்றால் அவற்றை அழித்து விடுமாறும் போலீஸ் அறிவுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!