Latestமலேசியா

60 வயது ஆடவர் கொலை மாற்றுத் திறனாளி இளைஞன் மீது குற்றச்சாட்டு

தானா மேரா, ஜூலை 1 – தானா மேரா , kampung Buluhவில் 60 வயது ஆடவரைக் கொலை செய்ததாக மாற்றுத் திறனாளியான 18 வயது இளைஞர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் Tun Faez Fikhrie Tun Asrul Saini முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அந்த இளைஞரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஜூன் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கும் 6.30 மணிக்குமிடையே kampung Buluh விலுள்ள மளிகைக் கடை ஓரத்தில் சம்சுடின் முகமட் என்பவரை கொலை செய்ததாக அந்த இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இரும்பினால் கடுமையாக தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயத்தினால் சம்சுடின் இறந்ததாக இதற்கு முன் ஊடகங்களில் தகவல் வெளியானது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 30 அல்லது 40 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் அந்த இளைஞர் மீது கொலைக் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. ரசாயன மற்றும் மருத்துவ அறிக்கைக்காக அந்த இளைஞனுக்கு எதிரான குற்றச்சாட்டு செப்டம்பர் 2 ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!