Latestமலேசியா

சோஸ்மா கைதிகளுக்கு ஜாமீன்; உச்ச நீதிமன்றம் அனுமதி

புத்ராஜெயா, ஜூலை 3 – சோஸ்மா (SOSMA) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு தொழிலதிபர்களுக்கு நீதிமன்றம் இன்று நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை வழங்கியுள்ளது.

சந்தேக நபர்களின் உடல்நலக்குறைவு மற்றும் கைதிகளுக்கான சிறப்பு மருத்துவ உதவி பற்றாக்குறை போன்ற காரணங்களின் அடிப்படையில் இந்த ஜாமின் வழங்கப்பட்டுளதாக அறியப்படுகின்றது.

சிறை மருத்துவமனையில் 2,500 பேருக்கு மட்டுமே சிகிச்சையளிக்கக் கூடிய வாய்ப்புள்ளது என்றும் தற்போது சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை 6,000 ஆக இருப்பதால் சிறப்பு சிகிச்சைகள் வழங்க இயலாது என்று சந்தேக நபரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளனர்.

சக்கர நாற்காலியில் இருக்கும் ஹேமநாதனுக்கும், நித்தியனுக்கும் இரண்டு உத்தரவாதங்களுடன் தலா 50,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தங்கள் வீட்டு வளாகங்களில் அடைத்து வைக்கப்படுவார்கள்என்றும் ஒவ்வொருவருக்கும் மின்னணு கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்படும் என்றும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!