Latestமலேசியா

LRT தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்த பயணி; புத்ரா ஹைட்ஸ்-அலாம் மெகா இடையிலான இரயில் சேவையில் பாதிப்பு!

கோலாலம்பூர், ஜூலை 4 -புத்ரா ஹைட்ஸ் நிலையத்திற்கும் அலாம் மெகா நிலையத்திற்கும் இடையில் இன்று மாற்று எல்.ஆர்.டி ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டன. இன்று காலை சுபாங் அலாம் நிலைய தண்டவாளப் பகுதியில் ஒரு பயணி அத்துமீறி நுழைந்த சம்பவம் நடந்துள்ளதாக Kelana Jaya வழித்தட எல்.ஆர்.டி நடத்துனரான ரேபிட் ரயில் சென். பெர்ஹாட்
( Rapid Ril Sdn Bhd ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அங்கு மீட்பு பணி நடவடிக்கைகளை மேற்கொள்வற்காக மீட்புக் குழுவினர் விரைவாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதனால் புத்ரா ஹைட்ஸ் நிலையத்திற்கான ரயில் அலாம் மெகா நிலையத்தில் நிற்கும். அங்கிருந்து அந்த ரயில் புத்ரா ஹைட்ஸ்சிற்கு திரும்பும். கோம்பாக் வழித்தடத்திலிருந்து புறப்படும் ரயில் தனது பயணத்தை அலாம் மெகா நிலையத்தில் முடித்துக்கொண்டு அங்கிருந்து கோம்பாக் திரும்பும்.

இது தொடர்பான ஆகக் கடைசி தகவல்களுக்காக ரேப்பிட் கே.எல் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் நிலையத்திலுள்ள அறிவிப்புகள் மூலம் புதுப்பிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!