
கோலாலம்பூர், ஜூலை 4 – கடந்த செவ்வாய்க்கிழமை, ‘பண்டார் பொட்டானிக்’ (Bandar Botanic) பகுதியிலுள்ள வீடொன்றில் 150,000 ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்பிலான யானை தந்தங்களை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு பேரைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையின் வனவிலங்கு குற்றப் பிரிவுனருடன் இணைந்து, வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (PERHILITAN) நடத்திய இச்சோதனையில் 37 மற்றும் 38 வயதுடைய இரு சந்தேக நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கண்டெடுக்கப்பட்ட தந்தங்கள், வனவிலங்கு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.