Latestமலேசியா

இரு கால்களையும் இழந்த அகம்பரனுக்கு மின்னியல் மோட்டார் சைக்கிள் வழங்கி லிங்கேஸ்வரன் உதவி

வாழ்க்கையில் கடும் சோதனைகளை எதிர்கொண்ட அற்புதமான மனிதர் அகம்பரன் கன்னியின் இரு கால்களும் நீரிழிவு நோயால் துண்டிக்கப்பட்டுவிட்டன.

கடந்தாண்டு, மனைவியையும் அவர் இழந்தார் – அவருக்கு இருந்த ஒரே துணையும் பராமரிப்பாளரும் அவரின் மனைவியே.

இப்போது, தனிமையில் வாழும் அகம்பரன, மாதம்தோறும் சமூக நலத் துறை வழங்கும் வெறும் 300 ரிங்கிட்டை மட்டுமே நம்பியுள்ளார்.

இது மிகவும் குறைவான தொகையாகும்; மருத்துவ பரிசோதனைக்குச் செல்வற்குக் கூட அவர் Grab சேவையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது, பல சமயங்களில் அதை செலுத்த முடியாத நிலையும் உள்ளது.

இந்த விஷயம் காதுக்கு எட்டியதும், செனட்டர் Dr லிங்கேஷ்வரன் R அருணாச்சலம், ஒரு மின்னியல் மோட்டார் சைக்கிளை அகம்பரன்னுக்கு வழங்கியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் சாவியை கையில் பெற்றுக் கொண்ட ஏகாம்பரனுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை; நா தழுதழுத்தது…

“என் வாழ்க்கை இப்படி துன்பத்தில் தான் முடியும் என நினைச்சேன். ஆனா இன்று… கடவுள் ஒருவரை அனுப்பினாரு,” என கண்ணீரோடு லிங்கேஷைப் பார்த்து அகம்பரன் நெகிழ்ந்தார்.

ஏகாம்பரன் அவர் ஒரு சிறிய தொழிலைத் தொடங்கி, சுயமரியாதையுடன் வாழ்ந்து காட்டவேண்டும் என்பதற்காக, மோட்டார் சைக்கிளோடு, ஒரு சிறு தொகை பண உதவியையும் லிங்கேஷ் வழங்கினார்.

அந்த பெரியவருக்கு கிடைத்தது ஒரு மோட்டார் சைக்கிள் மட்டும் அல்ல; ஒரு நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்த நாள் என லிங்கேஷ்வரன் மனம் நெகிழ்ந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!