
ரியோ டி ஜெனிரோ, ஜூலை-7 – IIT எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் campus வளாகத்தை மலேசியாவில் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அது குறித்து விவாதித்துள்ளனர்.
பிரேசிலில் நடைபெறும் BRICKS உச்ச நிலை மாநாட்டுக்கு வெளியே நேற்று இருவரும் சந்தித்து பேசினர்.
IIT – பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் முன்னணி கல்லூரியாகும்; உயர் திறன் தேர்ச்சிமிக்க பட்டதாரிகளை உருவாக்குவதிலும் புத்தாக்க வளர்ச்சியிலும் அக்கல்லூரி மிகவும் புகழ்பெற்றதாகும்.
உலக அளவிலும் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது.
இவ்வேளையில், கலாச்சாரம், சுற்றுலா, கல்விப் பரிமாற்றம் ஆகியவற்றில் அணுக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.
தவிர வாணிபம், முதலீடு, டிஜிட்டல் தொழில்நுட்பம், தற்காப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுப்படுத்தும் சாத்தியத்தையும் அவர்கள் விவாதித்தனர்.
பாலஸ்தீனம், ஜம்மு – காஷ்மீர் போன்ற அனைத்துலக விவகாரங்களில் அமைதியான முறையில் தீர்வுக் காணப்பட வேண்டும் என்பதையும் அன்வாரும் மோடியும் வலியுறுத்தினர்.