Latestமலேசியா

SIGA ஏற்பாட்டிலான வருடாந்திர கோல்ஃப் போட்டி; 130 பேர் பங்கேற்பு

கோத்தா கெமுனிங், ஜூலை-6 – SIGA எனப்படும் சிலாங்கூர் இந்தியர் கோல்ஃப் சங்கத்தின் ஏற்பாட்டிலான வருடாந்திர கோஃல்ப் போட்டி, கடந்த சனிக்கிழமை Kota Permai Golf and Country Club-லில் சிறப்பாக நடைபெற்றது.

8 மாநிலங்களைச் சேர்ந்த 130 பேர் பங்கேற்ற இப்போட்டியை, பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் தொடக்கி வைத்தார்.

Fire Fighter Industry நிர்வாக இயக்குநர் ஜேஃப்ரி சூ, Kota Permai இயக்குநர் தான் மெங் லூன், Kota Permai தலைமை நிர்வாகி ஷேரன் யோங், கிள்ளான் செண்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு வருகைப் புரிந்தனர்.

டத்தோ நாதன் சுப்பையா, R.M.தேவன், டத்தோ S.பதி, M.கணேசன், D.நீர்மோகன், அண்ட்ரூவ்சன் உள்ளிட்டோரை ஏற்பாட்டாளர்களாகக் கொண்ட இந்நிகழ்ச்சியின் முதன்மை நன்கொடையாளர் PANGGALIS GOLFERS GROUP ஆகும்.

Senior 5, Guest 5, Medal c 10, Medal b 10, Medal A 10, Gross winner 3, Nett winner 1, Overall Gross 1 என பல்வேறு பிரிவுகள் போட்டி நடத்தப்பட்டது.

எல்லா இந்தியர்களும் குறிப்பாக இளையோர் கோல்ஃப் விளையாட்டில் ஆர்வத்தோடு பங்கேற்பதை ஊக்குவிப்பதை இப்போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது.

போட்டியோடு நன்கொடை விருந்தும் நடைபெற்று, அதில் கிடைக்கும் நிதி B40 இந்தியர்களுக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கும் உதவ பயன்படுத்தப்படுகிறது.

இதுவரை 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 40-க்கும் மேற்பட்ட சிறார்கள் மற்றும் பதின்ம வயதினருக்கு SIGA, கோல்ஃப் விளையாட்டைக் கற்றுத் தந்துள்ளது.

இளையோருக்கு Kota Permai Golf Club-பில் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

வருங்காலத்தில் நாட்டின் முன்னணி கோல்ஃப் விளையாட்டாளர்களாக அவர்கள் வளர வேண்டுமென்பதே SIGA-வின் எதிர்பார்ப்பகும்.

பெரும்பாலும் வர்த்தகர்கள் பங்கேற்பதால் business networking எனப்படும் தொழில் தொடர்பை வளர்த்துக் கொள்ளும் களமாகவும் இந்நிகழ்வு அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!