
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10 – நேற்று தனது தந்தை வாங்கிய நாசி லெமாக் பொட்டலத்தில் ஒரு பெரிய கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்ட பெண்ணொருவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உணவின் நடுவில் ஒரு கரப்பான் பூச்சி இருக்கும் படத்தை அப்பெண் சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளதைத் தொடர்ந்து அந்த நாசி லெமாக் வியாபாரியை கண்டித்து பல எதிர்மறை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் வலைதளவாசிகள்.
இதற்கிடையில், தனது தந்தை கடைக்குத் திரும்பிச் சென்று அந்த கரப்பான் பூச்சி நாசி லெமாக் பொட்டலத்தை அந்த கடைக்காரரிடம் ஒப்படைத்ததாகவும் அதை அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை என்றும் அப்பெண் பதிவிட்டுள்ளார்.
கரப்பான் பூச்சி நாசி லெமாக் பொட்டலத்தை மடிக்கும் பொது சேர்க்கப்பட்டதா அல்லது அது ஏற்கனவே சாம்பலுடன் சமைக்கப்பட்டதா என்று அப்பதிவிற்கு பல்வேறு கருத்து குவியல்கள் வந்த வண்ணமாகவுள்ளன.