
கோலாலம்பூர், ஜூலை 14 – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, சோர்வு காரணமாக தேசிய இருதய நிறுவனத்தில் (ஐஜேஎன்) சிகிச்சை பெற்ற பிறகு, தான் நலமாக இருப்பதாகவும், மீண்டும் பணியைத் தொடங்கவுள்ளதாகவும் மகிழ்வுடன் கூறியுள்ளார்.
கடந்த வாரம் தனது 100 வது பிறந்தநாளை கொண்டாடிய துன் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது மக்களுடன் முழுமையாக இணைய முடியவில்லை என்று மிகுந்த வருத்ததுடன் கூறியுள்ளார்.
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய துன் யாருடைய உதவியுமில்லாமல் நடந்து செல்வதையும், காரில் ஏறுவதையும், பின்னர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (KLIA) வருவதையும் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் காண முடிகின்றது.
ஜூலை 10 ஆம் தேதி தனது 100 வது பிறந்தநாளை முன்னிட்டு புத்ராஜெயா ஏரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு அதிகாரிகளுடன் ஏரியைச் சுற்றி சைக்கிள் சவாரியில் பங்கேற்ற பிறகு அவர் சோர்வடைந்து IJN-இல் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.