
பெர்ரா, ஜூலை 14 – மே 2 ஆம் தேதி பெர்ரா , பெல்டா புக்கிட் மெண்டியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு எச்சங்கள், ஒரு ஆண்டுக்கு மேலாக காணாமல் போனதாகக் கூறப்படும் 49 வயதுடைய நபருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்டது.
பெல்டா திட்டத்தில் ஒரு சதுப்பு நிலத்திற்கு அருகிலுள்ள புதர்களுக்கு இடையில் கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்பு எச்சங்கள், ஹனாபி முகமதுவுக்குச் சொந்தமானவை.
அந்த எலும்புக் கூடுகள் தெங்கு அம்புவான் அப்சான் ( Tengku Ampuan Afzan ) மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதோடு , பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்களிடமிருந்து மரபணு பகுப்பாய்வுக்காக இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent சுல்கிப்லி நசீர் ( Zulkiflee Nazir ) தெரிவித்தார்.
மரபணு பகுப்பாய்வின் அடிப்படையில், எலும்புக்கூடு எச்சங்கள் ஹனாபியின் எலும்புக்கூடுகளாக அடையாளம் காணப்பட்டது. அவர் கடந்த ஆண்டு மே 3 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்டது.
மரபணு சோதனையில் அவரது சகோதரரின் இரத்த மாதிரியுடன்
99.9 விழுக்காடு துல்லியத்துடன் பொருந்தியது உறுதிப்படுத்தப்பட்டது.