
ஷா அலாம், ஜூலை 15 – செப்பாங், Tanjung தொழில்மயப் பகுதியிலுள்ள கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் உலர்த்தும் இயந்திரம் வெடித்ததைத் தொடர்ந்து அதனை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் இறந்தார்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் மணி 2.56 அளவில் ஏற்பட்ட அந்த சம்பவத்தில் கையுறை தயாரிப்புக்களை கழுவும் மற்றும் உலரவைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டு ஆடவர் மரணம் அடைந்ததாக சிலாங்கூர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு விசாரணை அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று விசாரணை நடத்துவதற்காக அனுப்பிவைக்கப்பட்டது.
சலவை இயந்திரத்தில் கையுறை தயாரிப்பு பொருட்களை உலர்ந்த இயந்திரத்தில் கழுவி காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி இச்சம்பவத்தில் மரணம் அடைந்தார் .
அந்த இயந்திரத்தின் கதவில் தனது கையை வைத்திருந்த நிலையில் அதனை பரிசோதித்த பின் அந்த இயந்திரத்தின் விசையை அழுத்தியபோது அது திடிரென வெடித்ததால் அவர் கீழே விழுந்தார்.
மிகவும் கவலைக்கிடமாக நிலையில் இருந்த அந்த ஊழியர் தனியார் மருத்துவமனையில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் அனைத்து வேலைகளையும் உடனடியாக அதன் நிர்வாகம் நிறுத்திவைப்பதற்கான கடிதம் விநியோகிக்கப்பட்டது.