
கிள்ளான் – ஜூலை 16 – கிள்ளான் மாவட்டத்தில் தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கான டத்தோ எம். ஜெயப்பிரகாசம் சுழற்கிண்ணத்திற்கான கபடி போட்டியில் 11 தமிழ்ப்பள்ளிகளுடன் ஏழு இடைநிலைப் பள்ளிகளும் கலந்துகொள்ளவிருக்கின்றன.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவாக நடைபெறும் இந்த கபடி போட்டி இன்று முதல் 19 ஆம்தேதிவரை கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும்.
இப்போட்டியில் தமிழ்ப் பள்ளிகள் பிரிவில் தாமான் செந்தோசா தமிழ்ப் பள்ளி, காப்பார் வலம்புரோசா தோட்ட தமிழ்ப் பள்ளி, எமரல்ட் தோட்ட தமிழ்ப் பள்ளி, ஹைலண்ஸ் தோட்ட தமிழ்ப் பள்ளி, நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்ப் பள்ளி, சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி, காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப் பள்ளி புக்கிட் ராஜா தோட்ட தமிழ்ப் பள்ளி, ஜாலான் அக்கோப் தோட்ட தமிழ்ப் பள்ளி , பத்து அம்பாட் தமிழ்ப் பள்ளி , வாட்சன் தமிழ்ப்பள்ளி ஆகியவை கலந்து கொள்கின்றன.
இடைநிலைப் பள்ளிகள் பிரிவில் கிள்ளான் டத்தோ ஹம்சா, ரந்தாவ் பஞ்சாங், ராஜா மஹாடி, கிளாங் உத்தாமா, ஸ்டார் (STA) , ஏ.சி.எஸ் மெத்தடிஸ் , துங்கு இட்ரிஸ் ஷா ஆகிய ஏழு இடைநிலைப் பள்ளிகள் பங்கேற்கவிருக்கின்றன.
கிள்ளான் மாவட்ட பள்ளிகள் விளையாட்டு மன்றத்திற்கான தமிழ் மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கான டத்தோ ஜெயப்பிரகாசம் கிண்ணத்திற்கான இப்போட்டிக்கான ஒட்டுமொத்த வெற்றியாளர் பிரிவுக்கும் , ஆண்கள் பிரிவுக்கும் அவர் இரண்டு சுழற் கிண்ணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இப்போட்டிகளை ஏற்று நடத்தும் SMK கம்போங் ஜாவா பள்ளியைச் சேர்ந்த தலைமையாசிரியர் மற்றும் புறப்பாட நடவடிக்கை ஆசிரியர்கள் மற்றும் கிள்ளான் மாவட்ட கபடி தொழிற்நுட்ப அதிகாரி கதிரவன் ஆகியோரிடம் ஜெயப்பிரகாசம் சவால் கிண்ணத்தை நேற்று ஒப்படைத்தார்.