Latestமலேசியா

Panasonic Malaysia-வின் புதியத் தலைமுறை குளிரூட்டிகள் அறிமுகம்

ஷா ஆலாம், ஜூலை-16- Panasonic Malaysia, புதியத் தலைமுறை X-Premium Inverter Series குளிரூட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Panasonic Air-Conditioning Malaysia நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி Dai Nishi, சிலாங்கூர், ஷா ஆலாமில் இப்புதிய குளிரூட்டியை அறிமுகம் செய்து வைத்தார்.

இது மலேசிய வாழ்க்கை முறை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில், கூடுதல் குளிரையும் காற்றை சுத்தப்படுத்துவதையும் ஒருங்கிணைத்துள்ள, நவீன Two-In-One விவேகக் குளிரூட்டியாகும்.

பாக்டீரியா, வைரஸ், ஒவ்வாமைக் கிருமிகள், துர்நாற்றம் ஆகியவற்றை அகற்றுவதுடன், தோல் மற்றும் முடிக்கு ஈரப்பதத்தையும் இது வழங்குகிறது.

இதில் உள்ள சுத்தமான காற்று தொழில்நுட்பங்கள், காற்றுத் தரக் குறியீடு, மற்றும் விவேக sensor உணர்திறன் வசதிகள் மூலம், வீட்டிலுள்ள காற்றை நேரலையாக உங்களால் கண்காணிக்க முடியும்.

தவிர, 5 நட்சத்திர அந்தஸ்துடன், 58 விழுக்காடு வரையிலான மின்சார சேமிப்பையும் இப்புதியக் குளிரூட்டி வழங்குகிறது.

இப்புதிய X-Premium Inverter Air Conditioner series குளிரூட்டிகள் இப்போது Panasonic-கின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகிப்பாளர் கடைகளிலும், Panasonic Malaysia இணைய விற்பனைத் தளங்களிலும் RM 2,801.00 தொடக்க சில்லறை விலையில் கிடைக்கின்றன.

Panasonic-கின் அனைத்து Inverter Air Conditioners குளிரூட்டிகளும், பொதுவான பாகங்களுக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதத்துடனும், compressor யூனிட்டுக்கு 5 ஆண்டுகள் உத்தரவாதத்துடனும் வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!