
கோலாலாம்பூர், ஜூலை-16- மருத்துவ சகோதரர்களான Dr புனிதன் ஷான் மற்றும் Dr சஞ்சய் ஷான் இருவரைப் பற்றி ‘Dr Brothers’ என்ற பெயரில் போலியான வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.இதில் வணக்கம் மலேசியாவின் பெயரும் சின்னமும் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வீடியோவுக்கும் வணக்கம் மலேசியாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை; எனவே அதன் உள்ளடக்கத்துக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டோம் என தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.
இது ஒரு பொறுப்பற்ற நடவடிக்கையாகும்; ஏற்கனவே இது போன்று வணக்கம் மலேசியாவின் பெயரும் சின்னமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வணக்கம் மலேசியா சார்பில் மலேசியா தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தில் (MCMC) புகாரளிக்கப்பட்ட நிலையில், இப்புதியச் சம்பவம் குறித்தும் புகாரளித்துள்ளோம்.
வணக்கம் மலேசியா நேயர்களும் வாசகர்களும் இது போன்ற போலியான பொறுப்பற்ற வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறோம்