Latestமலேசியா

மருத்துவமனை பிணவறையைக் ‘கைப்பற்றும்’ குண்டர்கள்; அம்பலப்படுத்திய மருத்துவர்

கூச்சிங், ஜூலை-17- சரவாக்கில் உள்ள ஒரு பொது மருத்துவமனையின் பிணவறையில், இறுதிச் சடங்குகளுக்கான முகவர்களாகச் செயல்படும் கும்பல்கள் அடிக்கடி நடமாடி வருவது அம்பலமாகியுள்ளது.

ஒரு முன்னாள் மருத்துவர் அதனை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

அவசர சிகிச்சைப் பிரிவு அல்லது மருத்துவமனை வார்டில் மரணம் பதிவான பிறகும், சில சமயங்களில் மரணம் உறுதிச் செய்யப்படுவதற்கு முன்பே கூட இந்த கும்பல்கள் வந்து விடுவதாக, Johan என மட்டுமே அறியப்பட விரும்பும் அவர் சொன்னார்.

நிச்சயம் உள் ஆட்கள் தான் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு வேண்டியத் தகவல்களை கொடுத்து வருகின்றனர்.

‘சடலங்களுக்காக’ அந்தக் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்வதும், இதனால் அங்கு பதற்றம் ஏற்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தக் கும்பல்கள் வழக்கமாக முஸ்லீம் அல்லாதவர்களின் உடல்களை குறிவைத்தே நடமாடுகின்றன; இதனால், துக்கத்தில் மூழ்கியிருக்கும் குடும்பங்கள், ஒரு வித அச்சத்தில், நியாயமான இறுதிச் சடங்குகள் கூட செய்ய முடியாமல் விரைவான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

2017-ஆம் ஆண்டு கோலாலாம்பூர், செராஸில் ஒரு சடலத்தை அடையாளம் காண்பதற்காக, தம்மிடம் 200 ரிங்கிட் ‘கட்டணம்’ வசூலிக்கப்பட்டதாக, முஸ்லீம் அல்லாதவரின் வாரிசுதாரர் ஒருவர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டணம் செலுத்தும் முகப்புகளில் அல்லாமல், பிணவறையில் அந்தக் ‘கட்டணம்’ வாங்கப்பட்டதன் அவசியம் இதுவரைத் தமக்குத் தெரியவில்லை என்றார் அவர்.

சடலங்களைக் கையாள்வதற்கு அல்லது இறந்தவர் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு எந்த வகையான பணம், பரிசு மற்றும் இதர அன்பளிப்புகளை பெற வேண்டாமென, மருத்துவமனை பிணவறை ஊழியர்களை ஜூலை 14-ஆம் தேதியன்று, சுகாதார அமைச்சு எச்சரித்திருந்தது.

பணத்தைப் பெறுவது அல்லது இறுதிச் சடங்கு சேவை முகவர்களுடன் ஒத்துழைப்பது ஊழலாகக் கருதப்படலாமென KKM விளக்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!