
காஜாங், ஜூலை-19- சிலாங்கூர் பாங்கியில் சாலையோரமாக 2 சிறார்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை 5 பேரின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
அவர்களில், குழந்தைப் பராமரிப்பாளரும் அடங்குவார் என, காஜாங் போலீஸ் தலைவர் Naazron Abdul Yusof கூறினார்.
பிள்ளைகளைப் பராமரிப்பதில் அலட்சியம் காட்டியதன் பேரில் நடைபெறும் விசாரணைக்கு, அந்த வாக்குமூலங்கள் முக்கியம் என்றார் அவர்.
பராமரிப்பாளர் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் யாருக்கும் தெரியாமல் அவ்விரு சிறார்களும் வீட்டிலிருந்து வெளியேறியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முறையே 3 மற்றும் 6 வயதிலான அச்சிறார்கள் சாலையோரமாக தனியே உட்கார்ந்திருப்பதைக் கண்டு பொது மக்கள் பின்னர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாங்கி போலீஸ் நிலையம் வந்தப் பெற்றோரிடம் சிறார்கள் ஒப்படைக்கப்பட்டனர்.