Latestமலேசியா

கோலாலம்பூரில் பிரமாண்ட அனைத்துலக 3K நடன போட்டியின் இறுதிச்சுற்று; கலைமகள் கலா மாஸ்டருக்கு கலைவிழா

கோலாலம்பூர், ஜூலை 26 – வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி, கோலாலம்பூர் ஐடியா லைவ் அரேனாவில் (IDEA LIVE ARENA) பி. எஸ் ராக்ஸ் கிரியேஷன் (BS Rocks Creation) ஏற்பாட்டில் கலைமகள் கலா மாஸ்டருக்கு கலைவிழா எனும் நிகழ்வு மிக பிரமாண்டாமாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு உதவிக்கரம் வழங்கிய பிரபல தொழிலதிபர் டத்தோ டாக்டர் ரவி மற்றும் அவர்தம் துணைவியார் டத்தின் காவேரி இந்த மாபெரும் விழாவை தலைமை தாங்கி சிறப்பிக்கவுள்ளனர்.

சினிமா நடனத் துறையில் 40 ஆண்டு கால அனுபவங்களைக் கொண்ட கலா மாஸ்டரை கொண்டாடி, அவர் சேவைக்கும் அவர் கற்ற கலைக்கும் மரியாதையைச் செய்யும் விதத்தில் அவருக்கு விருது வழங்கி சிறப்பு செய்யப்படவுள்ளது.

அதே நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நடன போட்டியின் 3K இறுதிச்சுற்றும் சேர்ந்து நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் இறுதி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் சிறந்த நடனக் கலைஞர் விருதை தட்டி செல்பவர்களுக்கும் கலா மாஸ்டர் தனது கைகளால் பரிசினை எடுத்து வழங்கவுள்ளார்.

இவ்விழாவில் மலேசிய மக்களின் அபிமான வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பல்வேறு படைப்புகளையும் படைக்கவிருகின்றனர்.

மேலும் உள்நாட்டு வெளிநாட்டு பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் இந்நிகழ்வில் தங்களின் திறன்களை வெளிப்படுத்தி மலேசிய ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கலை விருந்தைப் படைவிருக்கின்றனர்.

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்புவர்கள், உடனடியாக தங்களின் டிக்கெட்டுக்களை பெற்று கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!