
பெரா, ஜூலை 30 – Jalan Kuala Bera – Chemor 34 ஆவது கிலோமீட்டரில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஆடவர் மீது மரக்கிளை விழுந்ததில் அவர் மரணம் அடைந்தார்.
நேற்று மாலை மணி 6.50 அளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் 65 வயதுடைய அந்த ஆடவர் உயிரிழந்ததாக Bera மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan சுல்கிப்ளி நாசிர் (Zulkiflee Nazir ) தெரிவித்தார்.
கமார் செமான் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த மோட்டார் சைக்கிளோட்டி கம்போங் பத்து பாப்பான் தெங்காவிலிருந்து கம்போங் பத்து பாப்பானில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தின் கிளை திடீரென முறிந்து அவர் மீது விழுந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தலையின் பின்புறத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த மோட்டார் சைக்கிட்டி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்துட்டதாக சுல்கிப்ளி நாசிர் கூறினார்.