
கோலாலம்பூர், ஜூலை 30 – வருகின்ற ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று, கோழி முட்டைகளுக்கு வழங்கப்பட்ட மானிய விகிதம் முடிவடைந்த பிறகு போதுமான முட்டைகள் கிடைக்கும் என்று வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு (KPKM) உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் முட்டை விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் அமைச்சு அதனை உடனடியாகக் கையாளும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்துள்ளார்.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் கோழி முட்டை மானிய விகிதம் ஒரு முட்டைக்கு 0.10 சென்னிலிருந்து 0.05 சென்னாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிலையான உற்பத்தி செலவுகளைத் தொடர்ந்து கோழி முட்டைகளின் போதுமான உற்பத்தியை உறுதி செய்வதற்கான தொழில்துறையின் உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விலைக் கட்டுப்பாட்டு காலம் மற்றும் நீண்ட காலங்களுக்கு மானியங்களை வழங்குவது உள்ளூர் முட்டை உற்பத்தித் துறையின் வருவாய்க்கும் நாட்டின் நிதிக்கும் ஒரு நீடித்த தீர்வல்ல என்பதையும் அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளதாக KPKM அறிவித்துள்ளது.