
கோலாலம்பூர், ஜூலை 31 – ‘சாரா’ உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள 100 ரிங்கிட்டுக்கு 90,000 க்கும் மேற்பட்ட தினசரி பொருட்களை 4,500 பதிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களும் MyKasih இல் பதிவு செய்து ‘சாரா’ உதவி பொருட்களை விநியோகம் செய்யலாம் என்று நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறியுள்ளார்.
அரிசி, முட்டைகள், வீட்டு சுத்தம் செய்யும் பொருட்கள், மருந்துகள், பள்ளித் தேவைகள் மற்றும் தனிப்பட்ட சுகாதாரப் பொருட்கள் போன்ற 14 வகை அத்தியாவசிய பொருட்களை வாடிக்கையாளர்கள் இந்த உதவி பணத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் (SMEs) அவர்களின் வணிகங்களை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.