
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-1 – ஈராண்டுகளுக்கு முன்னர் தனது முன்னாள் மைத்துனியை கற்பழித்ததாக, வேலையில்லா ஆடவன் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
2023-ஆம் ஆண்டு புக்கிட் ஜாலிலில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் அதிகாலை 3.30 மணிக்கு 31 வயதான மாதுவைக் கற்பழித்ததாக அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்.
எனினும் குற்றத்தை மறுத்த அந்நபருக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம், ஆகஸ்ட் 26 வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென்றது.
உண்மையில், சம்பவம் நடந்த பிறகு அம்மாது போலீஸில் புகார் செய்ததும் தலைமறைவான அந்நபர் அண்மையில் போதைப்பொருள் குற்றத்திற்காகக் கைதாகி மேஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் நிறுத்தப்பட்டார்.
மேற்கொண்டு போலீஸ் விசாரித்த போதே, 31 வயது அந்நபர் கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என தெரிய வந்தது.
[18:56, 01/08/2025] Ms Vetha Vanakam Malaysia: Dass – NEWS 13
பணி நிரந்தரமாக்கலை நிராகரித்த 400-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள்; இடப் பிரச்னை முதல் எதிர்காலம் குறித்த கவலை வரைக் காரணம்
Over 400 contract medical officers decline permanent posts citing location and career concerns