
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 2 – அண்மையில் பார்வையற்ற ஒருவரை பத்திரமாக வீடு சேர்க்க, கே.எல் சென்ட்ரலிருந்து வாங்சா மாஜு வரையிலான, 18 LRT நிலையங்களைக் கடந்து பயணம் செய்த பெண் ஒருவரின் காணொளி வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
பார்வையற்ற முதியவருக்கு உதவிய அந்த இளம் பெண்ணின் சிந்தனைமிக்க செயலைக் கண்ட வலைத்தளவாசிகள் அப்பதிவிற்கு பாராட்டுகளைக் குவித்த வண்ணமாக உள்ளனர்.
அப்பெண் அவரது கையைப் பிடித்து, LRT நிலையத்திற்கு அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல், இறுதி நிறுத்தத்தில் அவர் இறங்கி, ஒரு டாக்ஸியில் ஏறும் வரை துணை இருந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தான் பயணம் செய்த ரயிலில் தனது வயது முதிர்ந்த மாமாவை சந்தித்த போது, அவருக்கு உதவ தான் முன்வந்ததாக அப்பெண் சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அவர் அக்காணொளியை பதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். 170,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ள அக்காணொளிக்கு, கருணை மிகுந்த கருத்துக்களும் குவிந்த வண்ணமாய் உள்ளன.