
கோலாலம்பூர், ஆக 3 – மலாக்கா, அலோர்காஜாவில் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 220.5 ஆவது கிலோமீட்டரில் ஒரு விரைவு பஸ் மற்றும் இரண்டு லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்தில் லோரி ஒட்டுனர் ஒருவர் காயம் அடைந்தார்.
இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட அந்த விபத்தில் 9 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவு பஸ் ஒன்று டிரெய்லர் லோரியையும் மற்றொரு லோரியையும் மோதியது.
இந்த விபத்தினால் ஏழு டன் லோரியைச் சேர்ந்த 23 வயதுடைய ஓட்டுனர் தனது இருக்கையில் சிக்கிக் கொண்டதைத் தொடர்ந்து தீயணைப்பு மீட்புப் பணி வீரர்கள் அவரை வெளியேற்றினர்.
எனினும் இந்த விபத்தில் 64 வயதுடைய விரைவு பஸ் ஓட்டுனரும் அதில் இருந்த 9 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் 56 வயதுடைய மற்றொரு லோரி ஓட்டுனரும் உயிர் தப்பினார்.
விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவதற்கு முன் நிகழ்விடத்திலேயே முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டதாக மலாக்கா தீயணைப்பு துறையின் இரண்டாவது மண்டல தலைவர் Zulkhairani Ramli
தெரிவித்தார்.