
கோலாலம்பூர் – ஆக 8 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் அக்டோபர் 10ஆம்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
Madani பொருளாதார முன்னுரிமைகளுக்கு ஏற்ப பட்ஜெட் உள்ளீடுகளைப் பெறுவதற்கு முக்கிய தரப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் விரிவான ஈடுபாட்டை நிதி அமைச்சு ஒருங்கிணைக்கும். 2026 பட்ஜெட்டில் பெறப்பட்ட உள்ளீடுகளை, குறிப்பாக பொருளாதார அதிகாரமளித்தல், மக்கள் நல்வாழ்வு மற்றும் சிறந்த நிர்வாகத்தை ஆதரிக்கக்கூடிய கடப்பாட்டிற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது,” என்று இன்று வெளியிடப்பட்ட 2026 பட்ஜெட்டுக்கு முந்தைய அறிக்கையில் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மதானி பட்ஜெட்டுகளின் நான்காவது தொடரான பட்ஜெட் 2026, நிதி வளத்தை மீட்டெடுக்கவும், பொருளாதார அடிப்படைகளை வலுப்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் மதானி பொருளாதார கட்டமைப்பைத் தொடர வடிவமைக்கப்பட்டுள்ளது.
2026 பட்ஜெட், மதானி பொருளாதாரத்தின் மூன்று பிரதான அம்சங்களை தொடர்ந்து ஆராயும், அதாவது தேசிய வளர்ச்சி உச்சவரம்பை உயர்த்துதல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது, குறிப்பாக நல்லாட்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் . இந்த பட்ஜெட் 2026 – 2030 காலகட்டத்திற்கான 13ஆவது மலேசியா திட்டத்தின் கீழ் முதல் வரவு செலவு திட்டமாகும்.