Latestமலேசியா

PKR உறுப்பினர் ஆனார் அமைச்சர் தெங்கு ஃசாவ்ருல்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-9- முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Tengku Datuk Seri Zafrul Abdul Aziz, அதிகாரப்பூர்வமாக பி.கே.ஆர் கட்சியில் இணைந்துள்ளார்.

அம்பாங் தொகுதி உறுப்பினராக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்.

பி.கே.ஆரில் இணைய Zafrul செய்திருந்த விண்ணப்பம், ஜூலை 26-ஆம் தேதி கட்சியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, பொதுச் செயலாளர் Fuziah Salleh தெரிவித்தார்.

கடந்தாண்டு டிசம்பரிலேயே அரசல் புரசலாக விஷயம் வெளியான நிலையில், அம்னோவிலிருந்து வெளியேறுவதாக இவ்வாண்டு மே 30-ஆம் Zafrul அறிவித்தார்.

அதோடு அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மற்றும் கோத்தா ராஜா தொகுதித் தலைவர் ஆகியப் பதவிகளையும் ராஜினாமா செய்தார்.

அம்னோவிலிருந்து ஒற்றுமை அரசாங்கத்தின் மற்றொரு கூட்டணிக் கட்சிக்கு அவர் ‘தாவுவது’ அம்னோவில் அப்போது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.

2020-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் அமைச்சரவையில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகே Zafrul வெளியில் தெரிய ஆரம்பித்தார்.

1997-ஆம் ஆண்டிலிருந்தே Zafrul அம்னோ உறுப்பினராக இருந்து வந்தாலும், 2022 பொதுத் தேர்தலில் குவாலா சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேசிய முன்னணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது தான், அம்னோவில் அதாவது உறுப்பியம் குறித்து தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!