Latestமலேசியா

பினாங்கு கொடிமலை கேபிள் கார் திட்டம்: BPMB & Hartasuma இடையே RM367.2 மில்லியன் ஒப்பந்தம்

ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-9- RM367.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான புதிய பினாங்கு கேபிள் கார் திட்டம் தொடர்பில், BPMB எனப்படும் Bank Pembangunan Malaysia Bhd-டும் Hartasuma Sdn Bhd-டின் துணை நிறுவனமான Hartasuma Ropeway Sdn Bhd-டும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பினாங்கு முதல்வர் Chow Kon Yeow முன்னிலையில் BPMB குழுமத்தின் சார்பில் Gerald Goh-வும் Hartasuma சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் தான் ஸ்ரீ M. ரவீந்திரனும் அதில் கையெழுத்திட்டனர்.

பினாங்கு கொடிமலைக்குச் செல்வதற்கான வசதியை மேம்படுத்துவதை, இந்த கேபிள் கார் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது பினாங்கு கொடிமலை உயிர்க்கோளக் காப்பகத்திற்கான இணைப்பை விரிவுபடுத்தி மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட கால பராமரிப்பு நிறுவனம் என்ற வகையில் Hartasuma Ropeways, ஒட்டுமொத்த கேபிள் கார் முறையையும் மேம்படுத்தி, இயக்கி பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.

இது எதிர்கால சந்ததியினருக்கான சொத்தை உருவாக்குவது பற்றியது என ரவீந்திரன் வருணித்தார்.

மணிக்கு 1,400 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படும் இந்தக் கேபிள் கார் திட்டம், Penang Botanical Gardens-சிலிருந்து கொடிமலை உச்சி வரை 10 நிமிட பயணத்தை உட்படுத்திய 2.73 கிலோ மீட்டர் தூர திட்டமாகும்.

தற்போதுள்ள funiculur இரயில் பாதைக்கு மாற்று போக்குவரத்து முறையை வழங்கும் இந்தக் கேபிள் கார் திட்டம், அடுத்தாண்டு டிசம்பரில் முழுமைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!