
கோத்தா கெமுனிங், ஆகஸ்ட் 10 – வேகமாக முன்னேறி வரும் AI அதிநவீன தொழில்நுட்பம் இன்று நாம் வேலை செய்வது, கற்றல் மற்றும் தொடர்பு கொள்வது போன்ற அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கோத்தா கெமுனிங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரேகாஸ் சம்புநாதன் நேற்று கெனங்கா மண்டபத்தில் AI கருத்தரங்கினை நடத்தினார்.
இந்த கருத்தரங்கில் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் துறை நிபுணர்கள் மற்றும் சமூக தலைவர்கள் கலந்து கொண்டு, AI-யின் தினசரி பயன்பாடுகள், பல துறைகளில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதாரத்தில் உருவாகும் வேலை வாய்ப்புகள் குறித்து அறிவைப் பகிர்ந்தனர்.
இந்த கருத்தரங்கின் மூலம், கோத்தா கெமுனிங் மக்கள் போட்டித்தன்மை உடையவர்களாக, மற்றும் மின்னியல் யுகத்தில் முன்னணி வகிப்பவர்களாக மாற வேண்டும் என தாம் விரும்புவதாக பிரகாஷ் சம்புநாதன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இடம் பெற்ற தொடர்பு அமர்வுகள், நேரடி காட்சி மற்றும் கேள்வி-பதில் பகுதிகள், பங்கேற்பாளர்களின் உற்சாகமான வரவேற்பைப் பெற்றதாக, AI பயிற்றுநர் ___ கூறினார்.
இப்பயிற்சியில் 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்,மாணவர்கள் என பல துறைகளை சார்ந்தவர்கள் கலந்துக்கொண்டு நன்மை அடைந்தனர்.