
பத்து பஹாட், ஆகஸ்ட்-13 – ஜோகூர், மூவாரில் வாகனமோட்டும் பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியரை தாக்கிய ஆடவரை போலீஸ் தேடுகிறது.
நேற்று மாலை பாரிட் சூலோங் (Parit Sulong) போலீஸ் நிலையத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
மூவாரிலிருந்து தாமான் முத்தியாராவுக்கு 4 மாணவர்களைக் காரில் ஏற்றிச் சென்ற 56 வயது ஆசிரியரை, சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்துள்ளான்.
Jalan Muar – Batu Pahat வந்தபோது திடீரென கத்திக் கூச்சலிட்ட அவ்வாடவன், ஆசிரியரை சரமாரியாகத் தாக்கி விட்டு தப்பியோடினான்.
ஆசிரியர் தாக்கப்படுவதை காரிலிருந்த மாணவர்கள் கைப்பேசியில் வீடியோவாக பதிவுச் செய்தனர்.
சம்பவம் நடந்த கையோடு, பாதுகாப்புக் கருதி மாணவர்களைக் காரிலிருந்து இறங்கச் சொல்லி வீட்டுப் பக்கமாக ஆசிரியர் போகச் சொல்லியுள்ளார்.
அவரோ, காயங்களோடு நேராக பாரிட் சூலோங் போலீஸ் நிலையத்திற்கு காரை ஒட்டிச் சென்று புகாரளித்தார்.
பின்னர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.