
கோலாலம்பூர், ஆகஸ்ட்-15 – தலைநகரில் உள்ள Wisma Pertahanan கட்டடத்தில் தடைச் செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறியதன் பேரில், இரு சீன நாட்டு ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில், அக்கட்டடத்தின் அருகிலுள்ள கால்பந்து மைதானத்தில் ட்ரோன் பறக்க விட்டுக் கொண்டிருந்த போது, ரோந்து போலீஸாரால் இருவரும் கைதுச் செய்யப்பட்டனர்.
20, 27 வயதிலான அவ்வாடவர்கள் பின்னர் வங்சா மாஜூ போலீஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ட்ரோன், memory card எனப்படும் நினைவக அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
முதலாளியின் கட்டளையின் பேரிலேயே ட்ரோன் ஒளிப்பதிவுக்குச் சென்றதாகவும், எனினும் அது எதற்காக என்ற காரணம் எதுவும் தெரியாது என்றும் இருவரும் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளனர்.
இருவரும் முறையான பயணப் பத்திரங்களை வைத்திருந்தனர்.
இந்நிலையில், தடைச் செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி வேவுப் பார்த்ததோடு ஒளிப்பதிவும் செய்ததாகக் கூறி, இருவரும் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
குற்றச்சாட்டை அவர்கள் மறுத்த நிலையில், செப்டம்பர் 11-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.