
கோலாலம்பூர், ஆக 18 – இம்மாதம் 31 ஆம் தேசி கொண்டாடப்டவிருக்கும் தேசிய தினத்தை முன்னிட்டு KL Sentralலில் Jalur Gemilang தேசிய கொடியை விநியோகிக்கும் மற்றும் பறக்கவிடும் நிகழ்ச்சியை மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்தது.
நாட்டின் மீதான தேசப் பற்று மற்றும் மக்களிடையே ஒன்றுமையுணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நேற்று நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய பட்டாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இன மற்றும் சமய வேறுபாடுகளை எல்லாம் கடந்து மலேசியர்கள் என்ற உணர்வோடு நாட்டு மக்கள் அனைவரிடமும் ஒற்றுமை மற்றும் மரியாதையுடன் நேசம் கலந்த பற்று தேசிய கொடி மீது ஏற்படுகிறது.
தேசிய கொடியை வீடுகளில் பறக்கவிடும்போது அனைவரும் Jalur Gemilang கீழ் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்ற செய்தியை அடுத்த தலைமுறைக்கு தெளிவாக தெரிவிக்கின்றோம் என மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய பட்டதாரிகள் சங்கம் தெரிவித்தது.
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் தேசிய தினத்தோடு மட்டுமின்றி எந்நாளும் நாட்டின் மீது விசுவாச உணர்வையும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான முயற்சியும் அதிகரிக்கப்பட வேண்டும்.
அந்த ஒருமைப்பாட்டு உணர்வுடன் தேசிய கொடி மீதான நமது விசுவாசத்தை வலியுறுத்தம் வகையில் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய பட்டதாரி சங்கத்தின் உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு தேசிய கொடியையும் வழங்கினர்.